
எப்.முபாரக்
திருகோணமலை சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதிகள் மற்றும் நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளின் பாடசாலை செல்லும் 88 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள்(பேக்,காற்பாதணி,பேனை,பென்சில்,புத்தகம்) வழங்கும் நிகழ்வு திருகோணமலை நகர சபை மண்டபத்தில் சிறைச்சாலை அத்தியட்சகர் வசந்த குமார டேப் தலைமையில் இன்று(25) நடைபெற்றது.
இந்நிகழ்வு சிறைச்சாலைகள் ஐக்கியம் அமைப்பின் பங்களிப்புடன் மூன்றாவது தடவையாகவும் நடைபெற்றது.இதன் போது தரம் ஒன்றிலிருந்து உயர்தரம் கற்கும் வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருகோணமலை மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய நோயல் இம்மானுவேல் அவர்களும்,சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் உப தலைவர் தயானந்த ஐயவீர,பிரதான ஜெயிலர் ஆர்.மோகனராஜா,சிறைச்சாலை ஐக்கியம் அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ரவிந்திரன் மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகள்,சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகளின் பிள்ளைகள் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
No comments: