News Just In

12/05/2022 07:08:00 AM

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி அறிக்கை!

பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்கள் ஊடாக ஐஸ் ரக போதைப்பொருள் பாவனை தீவிரமாக பரவிவருவதாக புலனாய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த புலனாய்வு அறிக்கை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகள், தனியார் வகுப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள், அவர்களது வயது, போதைப்பொருள் பாவனைக்குரிய காரணம் மற்றும் அதனை தடுப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்பன குறித்தும் அந்த புலனாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

தரம் 8 முதல் உயர்தரம் வரையிலான மாணவர்கள் மத்தியில் ஐஸ் போதைப்பொருள் பாவனை தீவிரமாக அதிகரித்து வருவதாகவும், தனியார் வகுப்புகளில் அதிகளவில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்கலைக்கழகங்களின் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இடையே ஐஸ் ரக போதைப்பொருள் பாவனை அதிகளவில் காணப்படுவதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: