இதுதொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:
01. 75 ஆவது சுதந்திர தினத்தன்று கட்டண அறவீடுகளின்றி தேசிய பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்களை பார்வையிடுவதற்கு மற்றும் திரைப்படங்களை பார்ப்பதற்கும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கல்
75 ஆவது சுதந்திர தினமான 2023 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி தேசிய பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்கள்/இடங்களை இலவசமாகப் பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கும், அன்றைய தினம் நாடளாவிய ரீதியிலுள்ள திரையரங்குகளில் நுழைவுச்சீட்டுக் கட்டணத்தின் 50% வீதக் கழிவுடன் திரைப்படங்களைப் பார்ப்பதற்கும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments: