
எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை முதல் கட்டமாக இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதியளித்துள்ளார்.
மேல் மாகாண முச்சக்கரவண்டிகளின் எரிபொருள் ஒதுக்கீட்டுக்கான பதிவு நவம்பர் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
இதேவேளை QR குறியீடு புதிய அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டின் ஊடாக நவம்பர் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
மேலும் ஏனைய மாகாணங்களிலும் இந்நடவடிக்கை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments: