News Just In

10/31/2022 12:47:00 PM

கத்தார் வாழ் இலங்கை மகளிர் அமைப்பின் தீபாவளி கலாச்சார நிகழ்வு




நூருல் ஹுதா உமர்

கத்தார் வாழ் இலங்கை மகளிர் அமைப்பின் தீபாவளி கலாச்சார நிகழ்வு இலங்கை ஸ்டாஃபோர்ட் பாடசாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் முகைதீன், கத்தார் வாழ் இலங்கை மகளிர் அமைப்பின் ஆலோசகர் டாக்டர் ஷெசூன் மொஹிதீன், கத்தார் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் பதிப்புரிமை அலுவலகத் தலைவர் டொக்டர் இப்ராஹிம் மஜீத் அல்ரோமைஹி , சர்வதேச வர்த்தக சபை பிராந்திய ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ரெமி ரௌஹானி மற்றும் அவர்களோடு கத்தாரின் முக்கிய பிரதிநிதிகளும், CDF அமைப்பின் தலைவர், கத்தார் வாழ் இலங்கை மகளிர் அமைப்பின் தலைவி மகதியா பாருக், மகளிர் அமைப்பின் உதவிப் பொதுச் செயலாளர் மோகன பிரியா பிரசாத், பிரதி பொருளாளர் நஸ்மா மாஷார், மற்றும் உறுப்பினர்களும் பெற்றோர்களும் பலர் கலந்து கொண்டனர்.

தீபாவளியை சிறப்பிக்கும் முகமாக கலாச்சார நிகழ்வுகளும் வில்லுப்பாட்டு, நடனங்கள், பாடல்கள், பாரம்பரிய உணவு வகைகள், கடை தொகுதிகள் என பல பல நிகழ்வுகள் நடைபெற்றன.


No comments: