News Just In

8/23/2022 10:07:00 AM

திருகோணமலை வலயக்கல்வி பணிப்பப்பாளர் சிவானந்தம் சிறீதரனின் ஈராண்டு சேவை பூர்த்தியையொட்டி சேவை நலன் பாராட்டு விழா.




எப்.முபாரக் 

திருகோணமலை வலயக்கல்வி பணிப்பப்பாளர் சிவானந்தம் சிறீதரனின் ஈராண்டு சேவை பூர்த்தியையொட்டி சேவை நலன் பாராட்டு ஒன்று கடந்த 17.08.2022 திகதி திருகோணமலை,ல் வலயக்கல்வி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த 2020.08.17 திகதி திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையேற்ற இவர் இரண்டு வருட கால சேவையை தற்போது பூர்த்தி செய்துள்ளார்.இந்த காலப்பகுதிக்குள் திருகோணமலை கல்வி வலயத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு செயல்திட்டங்களை உருவாக்கி கிழக்கு மாகாணத்துக்கு முன்னுதாரணமாக இருக்கும் அளவுக்கு வெற்றிகரமாக அவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றார்.

வலயமட்ட கல்வி அபிவிருத்திக் குழுவினை நெறிப்படுத்தி பாடசாலைகளுக்கு வலயமட்ட கல்வி அபிவிருத்திக் குழுவின் 'எழுமாற்று' தரிசிப்புக்களையும் மேற்கொள்ள இவர் எடுத்த நடவடிக்கைகள் அதிபர்கள் ஆசிரியர்களால் போற்றப்படுகின்றன.

பயனாளிகளுக்கு உடனுக்குடன் சேவையினை வழங்க வேண்டும் என்ற நன்நோக்கில் அலுவலகத்தில் 'துரித சேவை வழங்கல்' மையத்தை இவர் ஏற்படுத்தி இருந்தார். இந்த நிலை அதிபர், ஆசிரியர்களின் பணிகளை மென்மேலும் சிறப்பாக மேற்கொள்வதற்கு வழி வகுத்திருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

மேலும் பாடசாலைகளின் நிதிக்கட்டமைப்பினை பரிசீலனை செய்து நெறிப்படுத்துவதற்காக வலயமட்ட 'உள்ளகக் கணக்காய்வு' மையத்தினையும் தனது அலுவலகத்தில் ஒழுங்கு படுத்தியிருந்தமை கல்வி அபிவிருத்தில் நம்பிக்கையும் வெளிப்படுத்தி தன்மையும் உருவாக்கி இருந்தது.

மேலும் பாடசாலை மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் சகல பரீட்சை புள்ளிகள் சம்பந்தமான முழு தரவுகளையும் இணையதளத்தில் பதிவேற்றும் நடவடிக்கையும் இவர் மேற்கொண்டு இருக்கின்றார். இதன் மூலம் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் தகவல்களை பாடசாலைகளுக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலையானது பாடசாலை சமூகத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.

அத்தோடு தொழில் உலகுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் தனது வலயத்தில் உயர்தர வகுப்புகளில் அதற்கேற்ப புதிய பாடங்களை அறிமுகம் செய்து வைத்து வருகின்றார்.

இதற்காக இவர் ஒவ்வொரு பாடசாலைக்கும் நேரடியாகச் சென்று இவ்வாறான புதிய பாடங்களில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை இனம் கண்டு அவர்களுக்கு பொருத்தமான பாடசாலைகளை வழங்கி, அந்த பாடசாலைகளில் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடலோடு சம்பந்தப்பட்ட பாடங்களை அறிமுகப்படுத்தி வருவதனால் கலைத்துறையில் கல்வி கற்கின்ற மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுவருவதோடு கலைத்துறை மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்து, நம்பிக்கையும் உத்வேகம் ஏற்பட்டு இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இவர் திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தில் தனது கடமையினைப் பொறுப்பேற்றது முதல் கடந்த இரண்டு வருட காலமும் கொவிட் தாக்கம் பாரிய சவாலாக அமைந்திருந்தது. இந்த நிலையில் பின்தங்கிய நிலையிலிருந்த மாணவர்களின் கல்விச் செயற்பாட்டினை இணையவழி ஊடாகவும் மற்றும் இணையவழி அற்ற மாணவர்களுக்கு கற்றல் கையேடுகளை வீடுவீடாகச் சென்று வழங்குவதற்கு இவர் மேற்கொண்ட செயற்பாடானது பெற்றோர்கள் மத்தியில் இவர் மீதான நம்பிக்கையை உருவாவதற்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது.

திருகோணமலை வலய கல்வி அலுவலக பணியாளர்கள், அதிபர், ஆசிரியர்கள் ஆகியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் கல்வி பணிப்பாளர் பலராலும் வாழ்த்தப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கொரோனா அனர்த்த சூழ்நிலைக்கு மத்தியில் இவர் பணியாற்றிய இரண்டு வருடகாலகல்விசேவையினைநன்றியோடும்பெருமையோடும்திருகோணமலை கல்விச் சமூகம் நோக்குகின்றது. இவரது இந்தப் பணி இன்னும் சில வருடங்களுக்கு தொடர்ந்தால், திருகோணமலை கல்வி வலயம் நிச்சயம் கிழக்கு மாகாணத்துக்கு ஒரு முன்மாதிரியான வலயமாக திகழும் என பலரும் எதிர்வு கூறுகின்றனர்.




No comments: