News Just In

8/23/2022 11:15:00 AM

கந்தளாயில் உணவற்றோருக்கு உணவு வழங்கும் புதிய திட்டமொன்று ஆரம்பித்து வைப்பு.




எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியை மையப்படுத்தி முதல் கட்டமாக "உணவற்றோருக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டம்"கந்தளாய் அல் தாரீக் தேசிய பாடசாலைக்கு அருகாமையில் இத்திட்டம் இன்று(23) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உணவற்றோருக்கு உணவு வழங்குதல் என்ற தொனிப்பொருளில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களை இனங்கண்டு அவர்களுக்கு சமையலுக்கான பொருட்கள் பொதிகளை வழங்கி உதவுவது இதன் நோக்கமாகும்.

இவ்வேலைத் திட்டத்தினை,கந்தளாய் ஆயீஷா மகளீர் மஹா வித்தியாலய பிரதி அதிபர் ஜே.எம்.அஸாரினால் ஒரு தொகை உலருணவுப் பொதிகள் வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உணவற்ரோருக்கு உணவு வழங்குதல் வேலைத்திட்டத்திற்கு விரும்பியவர்கள் உணவூப்பொருட்களையோ அல்லது பண உதவிகளையோ வழங்க முடியும்.

இவ்வாரான வேலைத்திட்டங்கள் இலங்கையின் கிண்ணியா மற்றும் காத்தான்குடி,போன்ற இடங்களில் செயற்பட்டு வருவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தினை கந்தளாயின் அணைக்கட்டு,பேராற்றுவெளி மற்றும் வட்டுக்கச்சி போன்ற பகுதிகளிலும் கட்டம் கட்டமாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் தொடர்ந்து வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால் தனவந்தர்களின் உதவிகள் தேவை.

எனவே எதிர்காலத்தில் ஏழை மக்களின் ஒரு நேர பசியாவது நிவர்த்தி செய்யமுடியும் அனைவரும் இதற்காக உதவி செய்ய முன்வர வேண்டும் என்றும் அதன் தலைவர் ஜே.எம்.அஸார் கேட்டுக்கொண்டார்.

இந் ஆரம்ப நிகழ்வில் பாடசாலை அதிபர்கள்,கந்தளாய் பிரதேச உறுப்பினர்,ஆசிரியர்கள்,கிராம அதிகாரி, மற்றும் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்


No comments: