News Just In

8/11/2022 11:45:00 AM

மட்டக்களப்பில் சிறுபோக நெல் அறுவடை துரிதமாக நடைபெற்று வருகிறது




(மொகமட் தஸ்ரிப் லத்தீப்)
மட்டக்களப்பு மாவட்டத்தில்2022 சிறுபோக நெற்செய்கை பண்ணப்பட்ட நெல் வயல்கள் தற்பொழுது துரிதமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றன இம் மாவட் டத்தில் உள்ள 16 கமநல சேவை கேந்திர நிலையை பிரிவுகளில் சுமார் 32,260 ஹெக்டேரில் நெற் செய்கை பண்ணப்பட்ட தாக கமநல அபிவிருத்தித் திணைக் களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் கே ஜெகன்நாத் தெரி வித் தார்.

அறுவடைக் காலம் தொடங்கி உள்ளபோதிலும் அறுவடைக்கு தேவையான எரிபொருளை அரசாங்கம் பெற்றுக் கொடுத்ததனால் குறித்த வேளைக்கு தமது நெல்லை அறுவடை செய்வதற்கு வசதி கிட்டியதாக இப்பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர். விடுக்கின்றனர். ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க விவசாயி களின் நலனில் அக்கறை காட்டப்படும் என அறிவித்துள்ளார் இந்த அறிவிப்பு எமக்கு நம்பிக்கை ஊட்டுகின்றது.

எனவே எதிர்வரும் பெரும்போக நெல் செய்கையின் போது தேவையான யூரியா உட்பட சகல வசதிகளையும் பெற்றுத் தருவதற்கு புதிய ஜனாதிபதி நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

அறுவடை காலத்தில் அறுவடை செய்வதற்கு தேவையான எரிபொருளை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்தமைக்காக இந்த அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் நன்றி பாராட்டுவதாக விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.


No comments: