News Just In

8/17/2022 08:01:00 PM

ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக குழப்ப நிலை!




ஒன்பது மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடைய பலரை ஆளுனர்களாக நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆளுனர் பதவிகளுக்கு தனித்தனி பெயர்களை முன்மொழிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 என்பதனால் தமக்கு முன்னுரிமை வழங்குமாறு கோரியுள்ளனர்.

தயா கமகே, ஜோன் அமரதுங்க நவீன் திசாநாயக்க மற்றும் வடமேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஷமேல் செனரத் ஆகியோரும் ஆளுநர் பதவிக்கு முன்மொழிந்துள்ளனர்.

இதேவேளை, பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூன்று ஆளுநர்களுக்கு அந்த ஆளுனர் பதவிகளில் நீடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அக்கட்சி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

No comments: