News Just In

8/23/2022 10:35:00 AM

கோட்டா மற்றும் குடும்பத்தினர் பாதுகாப்பாக திரும்புவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழு




கோட்டாபய ராஜபக்ஷ, சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் சில சலுகைகள் மற்றும் நன்மைகளுக்கு உரித்துடையவர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடு திரும்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோரிக்கையை முன்வைக்கும் போதெல்லாம் அச்சுறுத்தல் நிலைமையை மதிப்பிடுவதற்கும், பாதுகாப்பை வழங்குவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் குடும்பம் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு அரசாங்கம் போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரைக்கிறது.

நாடு திரும்புவதற்கான அடிப்படை உரிமைகளை மீறும் அச்சுறுத்தல் சூழ்நிலையை அதிகாரிகள் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் சட்ட கட்டமைப்பிற்குள் அத்தகைய மீறல்களைத் தடுப்பதற்கும் அல்லது நிவர்த்தி செய்வதற்கும் நியாயமான மற்றும் பொருத்தமான அனைத்து வழிகளையும் மேற்கொள்ளவும் பரிந்துரைத்துள்ளது.

No comments: