News Just In

8/01/2022 06:25:00 AM

பிரான்ஸ் மக்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி!

பிரான்ஸில் தங்கள் வீடுகளை எண்ணெயால் சூடாக்கும் குடும்பங்களுக்கு உதவ புதிய நிதி உதவி திட்டத்தை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குளிர்காலத்திற்கு பயனுள்ள வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெயால் வீட்டை சூடாக்குவது எரிவாயு அல்லது மின்சாரத்தைப் பயன்படுத்துவதை விட சராசரியாக இரண்டு மடங்கு செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 3.5 மில்லியன் குடும்பங்கள் இன்னும் இந்த முறையைப் பயன்படுத்துகின்றன.

இதனால் இந்த நடைமுறையை மாற்றுவதற்காக புதிய நிதி உதவி திட்டம் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டதிற்கு ஆதரவாக பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மக்களின் வாங்கும் சக்தியை மேம்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் ஒரு பகுதியாக, பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ 230 மில்லியன் யூரோ திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் மொத்தம் 3.5 மில்லியன் குடும்பங்கள் இன்னும் தங்கள் வீடுகளை சூடாக்க எண்ணெயைப் பயன்படுத்துகின்றன. வருமானம் குறைந்த குடும்பங்களை இலக்காக கொண்டு அமுல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்திற்கு எதிர்கட்சியினர் சிலர் மாற்று கருத்துக்களை வெளியிட்ட போதிலும் பெரும்பான்மையானோர் இதற்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளனர்.

இந்த திட்டத்திற்கு 153 பேர் எதிராகவும் 164 பேர் ஆதரவாகவும் வாக்களித்துள்ளமையினால் எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு இந்த உதவி திட்டம் அமுல்படுத்தப்படும். நடுத்தர வகுப்பு மக்களின் நிலைமையின் அவசரத்தை உணர்ந்து இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் Orne Jérôme Nury தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நாடாளுமன்றத்தின் ஒரு பகுதியினர் எரிபொருள் மற்றும் எண்ணெய் தொடர்பான சமூக அவசர நிலையை உணரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: