News Just In

7/10/2022 12:25:00 PM

பொதுமக்கள் ஏற்படுத்திய புரட்சி! போராட்டக்காரர்களின் இன்றைய செயல்பாடு!





ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்கள் வெடித்தன.

ஜனாதிபதி செயலகம், ஜனாபதி மாளிகை போன்றவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும் நேற்று பிற்பகல் வேளையில் அவை ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.

இந்த போராட்டங்களின் விளைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகுவதாக அறிவித்துள்ளதோடு, பல அமைச்சர்களின் பதவியில் இருந்து உடன் விலகியிருந்தனர்.

போராட்டக்காரர்கள் ஏற்படுத்திய மாற்றம்

அத்துடன் புதிய அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தவும் இந்த போராட்டம் வித்திட்டுள்ளது.நேற்றைய போராட்டங்கள் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தனது இராஜினாமா கடிதங்களை கையளிக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில், ஜனாதிபதி செயலகம் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்ட இடங்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை முதல் அப்பகுதியை போராட்டக்காரர்கள் தூய்மைப்படுத்தி வருகின்றனர்.  

No comments: