News Just In

7/08/2022 06:36:00 AM

மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் தலைமையில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாநகர சபையின் ஐம்பத்தி ஆறாவது சபை அமர்வு!

மட்டக்களப்பு மாநகர சபையின் ஐம்பத்தி ஆறாவது சபை அமர்வு நேற்று (07.07.2022) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது புதிதாக நியமனம் பெற்றுக்கொண்ட சபை உறுப்பினர்கள் சபை அமர்வுக்கு சமூகமளித்திருந்தனர்.
இந்த சமர் சபை அமர்வின் போது மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் மக்களின் நன்மை கருதி குறைந்த செலவிலான நகர குறுந்தூர பஸ் சேவை நடத்துவதற்கு சபை அமர்வில் அனுமதி வழங்கப்பட்டது. மற்றும் மாநகர எல்லைக்குள் தடைபட்டுள்ள அபிவிருத்தி பணிகளை தொடர்வதற்கும் சபை அமர்வில்  தீர்மானமெடுக்கப்பட்டது.

சபை அமர்வு பற்றி நகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் கருத்து வெளியிடுகையில்;- மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் உள்ள மக்கள் தமது சேவைகளை இலகுவாக முடித்துக்கொள்வதற்காக விஷேட கணணி அப் நடைமுறைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி இருப்பதாகவும் இதன் ஊடாக தமது தேவைகளை இலகுவாக முடித்துக் கொள்வதற்கு வசதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில் மாநகர உறுப்பினர் ஒருவர் மீது தமக்கு கையூட்டல் வழங்குமாறு கப்பம் கோரி கூறிய விடயம் பற்றி தமக்கு எழுத்து மூலமாக ஒரு முறைப்பாடு கிடைத்திருப்பதாகவும் இதுபற்றி தனது உரிய நடவடிக்கையை வழங்குவதாகவும் பொது மக்களைப் பொறுத்தவரையில் மாநகர சபை கடமைகளை முடித்துக் கொள்வதற்கு எந்த விதமான கையூட்டல் செய்யக்கூடாது என்றும் எவ்வித கப்பமும் செலுத்துவதற்கு முன் வரக்கூடாது என்றும் மாநகர முதல்வர் பொது மக்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

(லத்தீப்)

No comments: