VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/09/2022 02:40:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி செய்தி !

on 7/09/2022 02:40:00 PM

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது

ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என ஏவ்பி பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை தகர்த்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை நோக்கி முன்னேறினர்.

இலங்கை கொடி மற்றும் ஹெல்மெட்டுகளுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறைகள் வராந்தக்களில் காணப்படுவதையும் ஜனாதிபதிக்கு எதிராக கோசமிடுவதையும் முகநூல் நேரலைகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படுகின்றனர் – பொலிஸாரும் படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 21 பேர் காயமடைந்த நிலையி;ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் போடப்பட்ட பொலிஸ் வீதித்தடைகளை தகர்த்தெறிந்து சென்ற வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து தடுப்பு வேலிகளையும் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்தனர்.

மூன்று தடைகளை தாண்டி கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகங்களை எதிர்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சதாம் வீதி வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை சென்றடைந்தனர்

Share



at 7/09/2022 02:40:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • மட்டக்களப்பு பகுதியில் மனைவியின் அறைக்குச் சென்ற கணவனின் நண்பரால் ஏற்பட்ட விபரீதம்!
    மட்டக்களப்பில் நண்பன் ஒருவரின் மனைவியை திருமணம் செய்து உறவில் ஈடுபட வருமாறு அழைத்து அவர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்ய...
  • பூண்டு வைத்திருந்தவருக்கு ஏற்பட்ட சிக்கல்!
    நாட்டில் ஏறக்குறைய ஒரு கோடி ரூபா பெறுமதியான இறக்குமதி செய்யப்பட்ட பூண்டின் ஒரு பகுதியை உரிமையாளருக்கும், கொள்வனவு செய்ய வந்த வர்த்தகருக்கும்...
  • எரிபொருள் விநியோக அளவில் மாற்றம்!
    தற்போது முழுநேர ஓட்டோ சாரதிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவில் மாற்றங்களை செய்ய எதிர்பார்த்துள்ளதாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெ...
  • முறிவு வைத்தியத்தில் மகத்தான சேவையாற்றும் சித்தாண்டி ஸ்ரீமுருகன் வைத்தியசாலை
    மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சித்தாண்டி கிராமத்தில் மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியை ...
  • யாழில் கொளுந்துவிட்டு எரிந்த ஏரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீடுகள்!
    யாழ் காரைநகர் கிழக்கு பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீடுகள் மர்ம கும்பல் ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அங்கிரு...
  • கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தினை தம்வசப்படுத்திய மட்டக்களப்பு நகர் ஐ.ஓ.சி!!
    நாடு பூராகவும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் இரவு பகலாக மிக நீண்ட வரிசைகளில...
  • தென்னிலங்கையின் பிரபல ஆண்கள் பாடசாலையில் நடந்த பாரிய சிறுவர் துஷ்பிரயோகம்!
    காலியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றில் பல மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது...
  • பாடசாலையில் கற்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் - கிடைக்கவுள்ள அதிஷ்டம்!
    இலங்கையில் 16 வயது முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிலா...
  • ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பில் சாய்பாபா சிறுவர் சத்திர சிகிச்சை பிரிவு திறப்பு விழாவிற்கு வாழ்த்துச் செய்தி
    (காத்தான்குடி நிருபர்)- நாட்டில் பிறப்பில் இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகும் சுமார் 1500 சிறார்களின் இருதய நோய்களுக்கு சத்திர சிகிச்சை மேற...
  • மட்டக்களப்பு சிறைச்சாலை புதிய அத்தியட்சகர் நியமனம்!!
    மட்டக்களப்பு சிறைச்சாலை வரலாற்றில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் சிறைச்சாலை அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையில்...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News