
Sundralingam Pradeep
2019 க.பொ.த A/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கானதேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான அனுமதிக்காக இதுவரை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படாமை குறித்துஇலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில் 2019 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களிடமிருந்து தேசியக் கல்வியியற் கல்லூரிகளுக்கு இதுவரை அனுமதி கோரப்படாமைக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் (CTSU) தொடர்ந்து தனது எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றது என்றும் கடந்த 03 வருடங்களாக பரீட்சைக்குத் தோற்றிய இளம் வயது மாணவர்களின் பொன்னான நேரம் வீணடிக்கப்படுவதோடு, தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறையினால் கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளும் பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி, அந்த மாணவர்களின் தகுதியின் அடிப்படையில் 19 கல்வியியல் கல்லூரிகளுக்கான மாணவர் அனுமதியை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 2019ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி பல வருடங்களாக கல்விச் கலாசாலைகளுக்குள் நுழைவதற்காக காத்திருக்கும் இம் மாணவர்களுக்கு சரியான நேரத்தில் கல்வி டிப்ளோமாவை தொடர்வதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது எனவும் இக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
No comments: