
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஐக்கிய அறபு இராச்சியத்திற்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளில், இருதரப்பும் அடைந்துகொள்ளக் கூடிய அனுகூலங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் துறை அமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
அமைச்சருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத் தூதுவர் காலித் நாஸர் சுலைமான் அல் அமரிக்குமிடையில் நடந்த சந்திப்பிலே, இதுபற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சுற்றாடல்துறை அமைச்சில் வெள்ளிக்கிழமை 09.06.2022 நடந்தது.
அந்தச்சந்திப்பில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவிக்கையில் சுற்றாடல் துறையின் மேம்பாடுகளால், அடையக்கூடிய உச்சபட்ச ஆதாயங்களை அடையாளங்காணல் அவற்றை அமுல்படுத்துவதில் இரு நாடுகளும் ஒத்துழைத்துச் செயற்படல், இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தீர்க்க முறையான உதவிகள் இன்னும், ஆலோசனைகளை ஐக்கிய அறபு இராச்சியம் வழங்குதல் பற்றியே ,இச்சந்திப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் இச்சந்திப்பில் ஐக்கிய அறபு இராச்சியத்திலுள்ள தொழில்வாய்ப்புக்களில் இலங்கையரை உள்வாங்குவது பற்றி கவனம் செலுத்துமாறு ஐக்கிய அறபு இராச்சியத்தூதர், அமைச்சர் நஸீர் அஹமட்டைக் கேட்டுக்கொண்டார்.
அதேபோல இலங்கையில் முதலிடுவதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்துமாறும் தூதுவரிடம் அமைச்சர் நஸீர் அஹமட் கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பில், அமைச்சின் செயலாளர் னுவைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க, முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரி ரீ. இஷற். சம்சுதீன் உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments: