News Just In

6/11/2022 07:17:00 PM

பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கவணஈர்ப்பு போராட்டம்!






எஸ்.எம்.எம்.முர்ஷித்
வீடு புகுந்து குடும்ப பெண் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்படாததை கண்டித்து குடும்ப உறுப்பினர்களால் இன்று (11.06.2021) சனிக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கவணஈர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வீடு புகுந்து குடும்பப்பெண் தாக்கப்பட்டமையை கண்டித்தும் பொலிசார் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து இன்று (11.06.2022) காலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உறவினர்கள் நீதி வேண்டி பொலிசாருக்கு எதிராக கவணயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக தந்தையுடன் மூன்று பிள்ளைகள் 'வீடு புகுந்து தாக்கியவர்களை இன்னும் ஏன் கைது செய்யவில்லை.' 'வாழைச்சேனை பொலிசார் ஒரு பக்கச் சார்பாக நடப்பது ஏன்.' 'எமக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி வேண்டும். ' என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

கடந்த புதன் கிழமையன்று பதுரியா வீதி பிறைந்துறைச்சேனையில் வசிக்கும் இரண்டு குடும்பத்தினருக்கிடையில் இடம்பெற்ற பிணக்கானது கைகலப்பாக மாறியதினால் உதுமாலெப்வை றிஸானா வயது (36) என்ற குடும்பப் பெண் தலையில் பலத்த தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்ப பெண்னின் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தும் சந்தேக நபர்களுக்கெதிராக பொலிசார் நடவடிக்கை எடுக்காது நாட்களை கழித்ததினால் நீதி வேண்டி வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் சம்பவ இடத்தில் இவர்களுக்கு ஆதரவாக ஒன்று கூடினர்.

குறித்த நிலவரத்தினை அறிந்து கொண்ட பொலிசார் ஓன்று கூடியவர்களை கலைந்து செல்லுமாறு பணித்து போராட்டத்தினை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். சந்தேக நபர்களை கைது செய்தால் மாத்திரமே தமது போராட்டத்தினை கைவிடுவதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் பதில் தெரிவித்தனர்.

நிலமையினை கட்டுப்படுத்தும் முகமாக பொலிசார் விரைந்து செயற்பட்டு சந்தேக நபர்கள் மூவரையும் விசாரணைக்கு அழைக்கப்பட்டதனை தொடர்ந்து கவணயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.


No comments: