News Just In

6/08/2022 12:13:00 PM

இந்திய தமிழக அரசின் அன்பளிப்பு உலர் உணவு பொதிகள் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் வழங்கிவைப்பு!!




(மட்டக்களப்பு விசேட நிருபர்)

இந்திய தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற உலர் உணவுப் பொதிகள் காத்தான்குடி பிரதேச செயலப் பிரிவில் வழங்கிவைக்கும் நிகழ்வுகள் நேற்று (07) திகதி இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறிதர் தலைமையில் குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது பிரதேச செயலகத்தின் கிராம உத்தியேமாகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.யறூப்உள்ளிட்டபிரதேசசெயலகஉத்தியோகத்தர்களும்கலந்துகொண்டு உலர் உணவுப்பொதிகளையும் வழங்கிவைத்துள்ளனர்.

காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 18 கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கே குறித்தஉலர் உணவுப் பொதிகள் முதற்கட்டமாக வழங்கிவைக்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்கு 3100 நிவாரணப் பொதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறிதர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கென முதற்கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ள 50000 பக்கட் அரிசி மற்றும் 3750 பக்கட் பால்மா என்பனவற்றை மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவிற்கும் முன்னுரிமையடிப்படையில் மாவட்ட செயலகத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: