News Just In

5/07/2022 07:01:00 AM

உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் லண்டனிலுள்ள ஒரு அழகிய தெரு (புகைப்படங்கள்)

லண்டனில் உள்ள முக்கிய தொடரூந்து நிலையங்களில் ஒன்று Waterloo. இது தெற்கு லண்டனில் உள்ள Lambeth நகரில் உள்ளது.

பிரித்தானியாவின் தெற்குப் பக்கமாக உள்ள கரையோரப் பட்டினங்களாகிய Weymouth, Southampton, Portsmouth போன்ற இடங்களுக்கான நெடுந்தூர கடுகதிப் புகையிரத சேவைகள் இங்கிருந்தே இயக்கப்படுகின்றன.

Waterloo Station க்கு தமிழில் பெயர்சூட்ட விரும்பும் அடியார்கள், Water என்றால் நீர் Loo என்றால் கழிப்பறை. எனவே இரண்டையும் கூட்டி, இரண்டால் வகுத்து ஒரு பெயரைச் சூட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்.

முகநூலில் தலைமை நிறுவனமாகிய Meta வுக்கு தமிழில் பெயர்சூட்டிய நமக்கு Waterloo எல்லாம் ஜுஜூபி. அதிருக்க, இந்த தொடரூந்து நிலையத்தின் கீழே 300 மீட்டர் நீளமான ஒரு தெரு உண்டு.

Leake Street என்பது அதன் பெயர். மேலே தொடரூந்து தரிப்பிட மேடைகளும், தண்டவாளங்களும் இருப்பதால், கீழே இருக்கும் இந்தத் தெருவை மூடி குகை போன்று கட்டியுள்ளார்கள்.

300 மீட்டர் குகைப்பாதையால் நீங்கள் செல்லும்போது உங்கள் கண்களைக் கவருவதற்காக இருமருங்கிலும் Graffiti எனப்படும் ஒருவகை ஓவியங்களைத் தீட்டி வைத்திருக்கிறார்கள்.

சுவர்கள், மதில்கள் போன்றவற்றில் வரையப்படும் ஒருவகை ஓவியமே Graffiti எனப்படுகிறது.

அரசாங்கத்தின் அனுமதியேதும் பெறாமல், பொதுமக்கள் தம் உணர்வுகளை வெளிக்காட்ட பண்டைய எகிப்திய, உரோம, கிரேக்க நாகரிக காலத்தில் இருந்தே இவற்றை வரைந்து வருகிறார்கள். ( தமிழ்ப் பிரியர்கள் இந்த Graffiti க்கு ஒரு தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்துக் கொண்டு வரவும். அது அவசியம்..! )

அங்கு நான் ரசித்த பலவகை ஓவியங்களை எனது கமெராவினால் சுட்டு, இங்கே தருகிறேன்.

பகல் பொழுதில் மாத்திரம்தான் இந்த ‘கல்லிலே கலைவண்ணம் கண்டான்’ எல்லாம்..! இராப்போது ஆனால் இந்தத் தெருவின் இராகமெல்லாம் மாறிவிடும்.

போதைப் பொருள், கஞ்சா, களவு, வழிப்பறி என்று சட்டவிரோதச் செயல்கள் அமோகமாக நடக்கும். அத்துடன் ‘கை தட்டித் தட்டி அழைத்தாளே’ வும் இங்கு நடக்குமாம். எனவே இந்தத் தெருவின் அழகை ரசிக்க விரும்புபவர்கள் பகல்பொழுதில் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு, நேரகாலத்துக்கு வீடு திரும்புவது நல்லது.










No comments: