News Just In

5/06/2022 06:32:00 AM

பெயர் பலகைகள் மீது உள்ளாடைகளை தொங்கவிட்ட மாணவர்கள்!

இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் பல்வேறு போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கொழும்பு - காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி கடந்த 27 நாட்களாக தன்னெழுச்சி போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் காலி முகத்திடல் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகின்றது.

இவ்வாறான நிலையில், கடந்த 04-05-2022 அன்று அரசாங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் மீது உள்ளாடைகளைத் தொங்கவிட்டு அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

பிற்பகல் வேளையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களால் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதங்கள் இடம்பெற்றதுடன் பதற்றமான நிலை தோன்றியது.

இதனையடுத்து மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகைத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அமைதி வழியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் மீது உள்ளாடைகளை தொங்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

No comments: