News Just In

4/07/2022 07:11:00 PM

சந்தைக்கு தேவையான கல்வியை நாம் கற்கவில்லை : மாநகர முதல்வர் தி.சரவணபவன்!

கனடாவில் பாடசாலைக் கல்வியை தொடர்வதற்கான அனுமதிக் கடிதத்தை மாணவருக்கு வழங்கும் நிகழ்வு HECS (Pvt) Ltd நிறுவனத்தால் நேற்று EDS கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.

HECS (Pvt) Ltd நிறுவனமானது கனடாவில் பாடசாலைக் கல்வி, டிப்ளமோ கல்வி மற்றும் பட்டபின்படிப்பு என்பவற்றை தொடர்வதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கும் ஒரு பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகும். இந்த நிறுவனத்தால் பாடசாலைக் கல்வியை கனடாவில் தொடர்வதற்கான அனுமதிபெற்ற முதல் தொகுதி மாணவர்கள் எட்டு பேருக்கு அனுமதிக் கடிதம் வழங்கும் நிகழ்வு HECS (Pvt) Ltd நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் சி.தேவசிங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவர் தமது உரையில் HECS (Pvt) Ltd நிறுவனத்தின் நோக்கம் பற்றி தெளிவாக உரைத்ததுடன் O/L சித்தியுடன் IELTS பரீட்சையில் 6.5 புள்ளிக்கு மேல் பெற்றவர்கள் கனடாவில் டிப்ளமோ கல்வியுடன் வேலைவாய்ப்பு மற்றும் வதிவிட அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் பற்றிக் கூறினார்.
மாணவருக்கான அனுமதிக் கடிதங்களை கல்லடி உப்போடை நொச்சுமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய பரிபாலன சபையின் முகாமையாளர் ந.ஹரிதாஸ் அவர்கள் வழங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஏனைய மாணவருக்கான கடிதங்களை மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்கள் வழங்கிவைத்தார்.
மட்டக்களப்பு நபர்கள் வெளியூர்களுக்கு தொழில்செய்ய செல்லமாட்டார்கள். ஏனெனில் கணவனுக்கு மனைவி அருகில் இருக்க வேண்டும். மனைவிக்கு கணவன் அருகில் இருக்க வேண்டும். கணவன் மற்றும் மனைவிக்கு அருகில் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டின் காரணமாக இந்த நிலை காணப்பட்டது. இதன் காரணமாக 90% மாணவர்கள் உள்ளூர் பாடசாலைகளிலே கல்வி கற்று உள்ளூரிலே அரச தொழில் ஒன்றை பெறும் நிலை காணப்பட்டது.துறைசார்ந்த சந்தைக்கு ஏற்ற கல்வியை நாம் தெரிவு செய்யவில்லை, தனியார் துறையில் எம்மவர்கள் தொழிலை பெறவில்லை. ஏனெனில் 96% ஆன தனியார் துறை எமது பிரதேசத்திற்கு வெளியிலே உள்ளது என மாநகர முதல்வர் குறிப்பிட்டார்.



No comments: