News Just In

4/25/2022 12:59:00 PM

பால்மா விலை மேலும் அதிகரிக்கலாம் !




இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இந்த வார இறுதியில்                    அதிகரிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பால்மாவிற்கான விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாலும், விலை எவ்வளவு அதிகரிக்கும் என கூறமுடியாது என்பதாலும் பால்மா நிறுவனங்கள் விரும்பியவாறு விலைகளை உயர்த்தி வருவதாக அச்சம் மேலும் தெரிவிக்கிறது.

இதேவேளை, பால்மா கிலோ ஒன்றின் விலை 800 ரூபாவில் இருந்து 1000 ரூபாவாக அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: