News Just In

4/25/2022 01:09:00 PM

மக்களின் போராட்டத்தால் முக்கிய திருடர்கள் பதவி விலகியுள்ளார்கள் - பஷில், கப்ராலை சாடும் முன்னாள் ஆளுனர்!




அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தினால் முக்கிய திருடர்கள் பதவி விலகியுள்ளார்கள். மக்களின் ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக மாற்றியமைக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சியின் பொறுப்பினை நாட்டு மக்கள் கையிலெடுத்துள்ளார்கள் என முன்னாள் ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.மக்களின் எழுச்சி போராட்டத்தினால் திருட்டுத்தனமான முறையில் நியமிக்கப்பட்ட நிதியமைச்சரும்,மத்திய வங்கியின் ஆளுநரும் பதவி விலகியுள்ளதுடன்,எதற்கும் பயனற்ற நிதியமைச்சின் செயலாளர் பதவி விலகியுள்ளமை மக்கள் பெற்றுக்கொண்ட வெற்றியாக கருத வேண்டும்.

மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் உறங்கிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.எதிர்க்கட்சியின் பொறுப்பினை நாட்டு மக்கள் கையிலெடுத்துள்ளார்கள்.நாட்டில் சிறந்த அரசாங்கமும் கிடையாது அதேபோல் பலமான எதிர்க்கட்சியும் கிடையாது.

மக்களின் ஜனநாயக போராட்டத்தை வன்முறையான மாற்றியமைக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.மிரிஹான ,றம்புக்கனை பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் அவதானத்திற்குரியது.மக்களின் போராட்டம் நிச்சயம் வெற்றிப்பெறும் என்றார்.

No comments: