News Just In

4/25/2022 12:53:00 PM

காலி முகத்திடலின் சத்தம் கோட்டா மாமாவின் அலுவலகத்தில் கேட்கிறதா?ஆங்கில செய்தித்தாள் ஒன்று கேலிச்செய்தயை பிரசுரித்துள்ளது.




நீங்கள் அமைச்சர்களாக பதவியேற்றதைக் கண்டு நான் சிரிப்பதா, அழுவதா அல்லது மிகவும் கோபப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை என்று இலங்கையின் புதிய அமைச்சர்கள் தொடர்பில் ஆங்கில செய்தித்தாள் ஒன்று கேலிச்செய்தயை பிரசுரித்துள்ளது.1948-ல் வெள்ளைக்காரர்கள் நம் கரையை விட்டு வெளியேறியதில் இருந்து மிகப் பெரிய பொருளாதாரப் பேரழிவை நாம் எதிர்கொள்கிறோம்.

இந்தநிலையில் ஒரு டசின் அமைச்சர்களை நியமிப்பதால் நெருக்கடி போய்விடும் என்று யாரோ நினைத்திருக்கிறார்கள். இதனால் நீங்கள் நியமிக்கப்பட்டுள்ளீர்கள்.

பாடசாலை கிரிக்கட் போட்டியின் முந்திய ஆட்டத்தில் ஏ அணி மோசமாகத் தோல்வியடைந்தபோது பி அணியை விளையாட அனுப்புவது போன்றே இது அமைந்துள்ளது.

புதிய அமைச்சரவையில் இளமையும் அனுபவமும் கலந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மகிந்த மாமா, ஜி.எல் மற்றும் தினேஷ் போன்ற தாத்தாக்களுடன் வேலை செய்யும் அரசியல் குழந்தைகளாக நீங்கள் உள்ளீர்கள்.

காலி முகத்திடலின் சத்தம் கோட்டா மாமாவின் அலுவலகத்தில் கேட்கிறதா? அல்லது அந்த சத்தம் 'கபுடு காக், காக் காக்' என்ற சத்தத்தில் மூழ்கிவிடுகிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

காலி முகத்திடலில் போராட்டம் நடத்துபவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளில் ஒன்று, தகுதியின் அடிப்படையில் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.

நீங்கள் யாரோ ஒருவரின் மகன் அல்லது மகள் என்பதற்காக அல்ல. 17 பேர் கொண்ட இந்த அமைச்சரவையில், முன்னாள் அமைச்சர்களின் ஏழு மகன்களுக்கும் குறையாமல் ஒருவரின் மருமகனும் உள்ளனர் என்பதை பார்க்கமுடிகிறது

இதில் துரதிர்ஷ்டவசமாக, ஜொனி வெளியேற்றப்பட்டார். இது சரியான திசையில் ஒரு படியாக இருந்தாலும், அது நீண்ட காலம் நீடிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

எரிவாயு விலையை ஒழுங்குபடுத்துவதற்கு உங்களில் யார் பொறுப்பு என்று எனக்குத் தெரியவில்லை. யாராக இருந்தாலும் எரிவாயு கொள்கலனின்; விலை கடுமையாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு, சில மணி நேரங்கள் கழித்து அது மாற்றப்பட்டது.

அமைச்சரானவுடன் பதவி விலகல் கடிதம் கொடுப்பது இப்போது வழக்கமாகிவிட்டது. சப்ரி முதலில் அதனை செய்தார். தற்போது நாலகவும் செய்துள்ளார். இரண்டு தடவைகளிலும் கோட்டா மாமா அதை ஏற்க மறுத்தார். அத்துடன் கோட்டா மாமாவும் பதவி விலக தயங்குகிறார்.

அன்புள்ள புதிய அமைச்சர்களே, கோட்டா மாமா நீங்கள் இந்தப் பணியை ஏற்க வேண்டும் என்று விரும்பினாலும், அவருடைய தரத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இல்லை.

உங்கள் அனைவருக்கும் பதிலாக அனைத்துக் கட்சி குழுவை அமைக்க வேண்டும் என்று டலஸ் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் ஒருவேளை பிரதமராக வருவார் என்று சிலர் நினைப்பதால் அப்படிச் சொல்கிறாரா என்று தெரியவில்லை. இருப்பினும் புதிய அமைச்சர்கள் நீங்கள் நலமுடன் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

No comments: