News Just In

4/06/2022 06:27:00 AM

41 வது நாளாக தொடரும் உக்ரைன் - ரஷ்யா போர்!

உக்ரைன் மீது ரஷ்யா 41 வது நாளாக போர் நடத்தி வருகிறது. மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் பகுதியில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்.

மேலும், ரஷிய டார்க்நெட் சந்தை மற்றும் கிரிப்டோ பரிமாற்றத்தின் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ரஷியாவில் புதிய முதலீடுகளுக்கு தடை உட்பட கடுமையான புதிய தடைகளை விதிக்கும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

முக்கியமாக கிழக்கு உக்ரைனில் அமில கிடங்கு மீது ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது. இதை சுவாசித்தால், விழுங்கினால் ஆபத்தானது என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷியா போரில் தலைநகர் கீவ், மரியுபோல், கார்கிவ், கெர்சன், செர்னிஹிவ் என பலநகரங்களில் கட்டமைப்புகளை ரஷியா தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களால் அழித்தன.

இதனால், ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்கள் என கட்டிடங்கள் தாக்கப்பட்டு, எலும்புக்கூடுகளாக காட்சி அளிக்கின்றன. இதுவரை 18 ஆயிரத்து 500 ரஷிய படை வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

676 டாங்கிகள், 1,858 கவச வாகனங்கள், 150 போர் விமானங்கள், 135 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளன. ரஷியாவே 1,351 படைவீரர்கள் இறந்துள்ளனர்.

மேலும், தலைநகர் கீவைச்சுற்றிலும் உள்ள பகுதிகளை உக்ரைன் படைகள் மீட்டெடுத்துள்ள நிலையில், அங்கு 410 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் கதவுகள், ஜன்னல்களை மூடிக்கொண்டு உள்ளே இருக்க வேண்டும். ஈரமான முக கவசங்களை அணிந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது அங்குள்ள மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி உள்ளது.

No comments: