News Just In

3/12/2022 03:53:00 PM

தேவைக்கு அதிகமானளவு உப்பை சேர்த்துக் கொள்வது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்


நாட்டில் பதிவாகின்ற மரணங்களில் 39 சதவீதமானவை உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படுபவையாகும், இவ்வாறு உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் காரணம் உணவில் தேவைக்கு அதிகமான உப்பை சேர்த்துக் கொள்வதாகும்.
இது தொடர்பில் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ஷாந்தி குணவர்தன தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,நபரொருவர் நாளொன்று 5 கிராமை விட குறைந்தளவான உப்பையே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இலங்கையில் 2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி சராசரி உப்பு பாவனை 8.3 கிராமாகக் காணப்பட்டது.

இது 2019 ஆம் ஆண்டில் 13.3 கிராமாக அதிகரித்துள்ளது, இவ்வாறு அளவுக் அதிகமான உப்பை உணவில் எடுத்துக் கொள்வதால் உடலில் சோடியம் சேரும் வீதம் அதிகரிக்கும்.நாட்டில் பதிவாகும் மரணங்களில் 83 சதவீதமானவை தொற்றா நோய்களால் பதிவாகுபவையாகும், இதில் 34 சதவீதமானவை அதாவது மூன்றில் ஒரு பங்கு உயர் இரத்த அழுத்தத்தால் பதிவாகுபவையாகும்.


இதற்கு காரணம் உடலில் தேவைக்கதிகமானளவு உப்பை சேர்த்துக் கொள்வதாகும்.எனவே அநாவசிய உப்பு பாவனையை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம், உப்பு பாவனை என்பது அடிமைப்படும் ஒரு விடயமாகும்.இதிலிருந்து மீள்வதற்காகவே எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.

No comments: