News Just In

3/19/2022 08:00:00 PM

எரிபொருளுக்காக வரிசையில் நின்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

கண்டியில் எரிபொருள் வரிசையில் நின்றவர் இன்று மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். எரிபொருளை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 71 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 71 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் நீண்ட நேரமாக எரிபொருள் வரிசையில் காத்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இலங்கையின் அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகளே இவ்வாறான நெருக்கடி நிலைக்கு காரணம் என எதிர்க்கட்சிகளும் பொருளாதார நிபுணர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் நாடாளவிய ரீதியில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் போராடி வருகின்றனர். வயது முதிர்வினையும் பொருட்படுத்தாது பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சமகால அரசாங்கமே காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் இன்றையதினம் எரிபொருளுக்காக காத்திருந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை நேற்றையதினம் கொழும்பில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற பெண் ஒருவர் மயங்கி விழுந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: