
உக்ரேனிய முன்னாள் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி கடந்த வாரம் ரஷ்யாவின் படையெடுப்பிற்கு முன்னதாக தனது நாட்டின் தற்காலிக இராணுவப் படையில் சேர்ந்துள்ளார்.இராணுவ அனுபவம் இல்லாத போதிலும், துப்பாக்கியை கையாள முடியும் என்று அவர் கூறினார்.
36 வயதான ஸ்டாகோவ்ஸ்கி, நான்கு ஏடிபி பட்டங்களை வென்றவர் மற்றும் 2013 இல் விம்பிள்டனின் இரண்டாவது சுற்றில் ரோஜர் பெடரருக்கு எதிராக அதிர்ச்சிகரமான வெற்றியைப் பெற்றார்.
ஜனாதிபதி விளாடிமிர் புடினின் போர்ப் பிரகடனத்தைத் தொடர்ந்து வியாழன் அன்று தரை, வான் மற்றும் கடல் வழியாக ரஷ்யாவின் படையெடுப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
No comments: