News Just In

2/25/2022 02:21:00 PM

உக்கிரமடையும் உக்ரைன் போர்!



உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு தேசிய உரையை நிகழ்த்தினார், இதன்போது வெள்ளிக்கிழமை அதிகாலை தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளை பல ரஷ்ய படையினர் தாக்கியதை அவர் உறுதிப்படுத்தினார்.

கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கில் உள்ள உக்ரேனிய நகரங்கள் மீது முன்னேறிய பின்னர், ரஷ்யா உக்ரேனிய தலைநகர் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது..

உக்ரேய்ன் கிழக்கில் பிரிந்து சென்ற பகுதிகளிலும், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவிலும் கடுமையான சண்டையுடன், நாடு முழுவதும் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.

படையெடுப்பின் முதல் நாளான நேற்று - குறைந்தது 137 பொதுமக்கள் மற்றும் வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறியுள்ளது. அவர்களில் 13 உக்ரேனிய காவல்துறையினர், கருங்கடலில் ஒரு சிறிய பிரதேசத்தை ஸ்னேக் தீவை பாதுகாக்கும் நடவடிக்கையின் போது மரணமாகினர்.

உக்ரேய்னின் வடக்கில் செர்னோபில் அணுசக்தி தளம், ரஷ்ய படைகளிடம் வீழ்ந்த நிலையில் உக்ரைன் படையினர் அங்கு பிணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகியவை ரஷ்ய வங்கிகள், நிறுவனங்களை குறிவைத்து வெள்ளிக்கிழமை புதிய பொருளாதாரத் தடைகளை வெளியிட்டன. மேற்கத்திய நாடுகளும் உக்ரேனியப் படைகளுக்கு உதவி மற்றும் இராணுவப் பொருட்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளன பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு தொலைபேசியில் அழைத்து செய்து தாக்குதலை நிறுத்துமாறு கோரியுள்ளார்.

இந்தநிலையில் உக்ரேய்ன் ஜனாதிபதி இன்று காலை நிகழ்த்திய உரையில், மேற்கத்திய தடைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார், "நேற்றைய நாள் போலவே, உலகின் மிக சக்திவாய்ந்த சக்திகள் தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

No comments: