News Just In

1/08/2022 07:03:00 AM

பொருளாதாரத்தின் அடிப்படைகள் கூட தெரியாத மத்திய வங்கியின் ஆளுநர் : சஜித் பிரேமதாச

பணம் அச்சடிக்கப்பட்டாலும் பணவீக்கம் அதிகரிக்காது எனப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் கூட தனக்குத் தெரியாதவர் போல் மத்திய வங்கியின் ஆளுநர் கூறுகின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆர்ஜென்டினா, சிம்பாப்வே, வெனிசுவேலா போன்ற நாடுகளை நோக்கித் நகர்ந்தவே மத்திய வங்கியின் ஆளுநர் செயற்பட்டு வருகின்றார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசின் தன்னிச்சையான தீர்மானங்களால் முழு நாடும் அழிவை நோக்கிச் சென்றுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) எண்ணக்கருவின் பிரகாரம் செயற்படுத்தப்படும் ‘ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மூச்சு’ திட்டத்துக்கு இணைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் ‘ஜன சுவய’ திட்டத்தின் கீழ் ‘சத்காரய’ திட்டத்தின் 35ஆவது கட்டமாக, 24 இலட்சத்து 57 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள் இன்று வவுனியா மாவட்ட தேசிய வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவி த்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் ‘ஜன சுவய’ கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ‘எதிர்க்கட்சியின் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.

இதுவரையில் 34 கட்டங்களில் 10 கோடி 16 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்தியசாலை உபகரணங்களை ஐக்கிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டுள்ளன.




No comments: