News Just In

12/01/2021 06:54:00 PM

சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் கடந்த ஆறு ஆண்டுகளாக தற்காலிக பதிலீட்டு மற்றும் அமைய ஊழியர்களாக கடமையாற்றிவரும் 43 பேர் தமக்கு சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஏறாவூர்ப் பற்று செங்கலடி பிரதேசசபை முன்றலில் புதன்கிழமை (01) காலை ஒன்றுகூடிய ஊழியர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களையெழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச சபையில் கடந்த ஆறு ஆண்டுகளாக வருமானம், சேவை மற்றும் எமது சேவை அளப்பெரியது. நாங்கள் கால நேரம் பாராது எந்த நேரத்திலம் முழுமனதுடன் சேவையாற்றி வருகிறோம். சூழல் சுத்திகரிப்பு, அனர்த்த காலங்கள் மற்றும் கொவிட் 19 தொற்று நிலையிலும் எமது சுகாதாரத்தையும், உயிரையும் துச்சமாக நினைத்து உழைத்துவருகிறோம். ஆனால் எமக்கு குறைந்தளவான ஊதியமே கிடைக்கிறது.

ஓவ்வொரு ஊழியரின் குடும்பமும் தற்போதுள்ள விலைவாசியில் குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத இக்கட்டான சூழலுக்கு தள்ளபட்டுள்ளது.நாங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக சேவையாற்றிவருகின்ற நிலையில் நிரந்த நியமனம் தொடர்பாக அரசியல் பிரமுகர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை. நாங்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இதுவரை சேவையாற்றி வருகிறோம்.

எனவே எமது சபையிலுள்ள 43 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு 2022 ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து எமக்கு நிரந்த நியமனம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதேச சபையின் தவிசாளர் சி.சர்வானந்தனிடம் ஒப்படைத்தனர்.

.எச்.ஹுஸைன் 







No comments: