News Just In

11/27/2021 03:27:00 PM

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் கைது!

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் இன்றையதினம் சனிக்கிழமை(27) விசேட அதிரடிப் படையினரால் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முகநூலில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டதாக கூறியே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: