News Just In

11/02/2021 07:35:00 PM

சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம் - அரிசி இறக்குமதிக்கும் அனுமதி!

இதுவரையில் சீனிக்காக நிலவிய கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவ்வாறே, அதிகாித்துள்ள அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதிசெய்ய இன்று(02) மாலை நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற வாழ்க்கை செலவுக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறே, நாளை முதல் வெள்ளை சீனி கிலோவொன்றின் மொத்த விலையை 135 ரூபா முதல் 140 ரூபாவரை விற்பனை செய்யவும், 150 ரூபா சில்லறை விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் எமது செய்திப் பிாிவுக்கு இலங்கை சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவிக்கையில், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 976 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன. இந்த சீனி கொள்கலன்களை விடுவிப்பதற்கான அமெரிக்க டொலர்களை வழங்க நிதியமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

No comments: