News Just In

8/13/2021 07:22:00 PM

ஒரு இலட்சம் கிலோ மீட்டர் வேலைத்திட்டம் கல்குடாவிலும் ஆரம்பம்...!!


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் ஓர் அங்கமான ஒரு இலட்சம் கிலோ மீட்டர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுத் தலைவருமான அல்ஹாபில் நசீர் அஹமட்டின் முயற்சியின் பலனாக கிராமிய வீதி அபிவிருத்தி மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் மூன்று வீதிகளின் வேலைகள் நேற்று (வியாழக்கிழமை) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்தவகையில் வாழைச்சேனை செம்மண்ணோடை ஹாஜியார் வீதி இரண்டு கோடியே முப்பத்தெட்டு இலட்சம் நிதி ஒதுக்கீட்டிலும், வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை அஸ்கர் பாடசாலை வீதி அறுபத்தாறு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டிலும், வாழைச்சேனை மீன்பிடி சங்க வீதி இருபத்தெட்டு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டிலுமாக மூன்று வீதிகள் காபட் வீதிகளாக புனரமைப்பு செய்வதற்கான வேலைத் திட்டங்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுத் தலைவருமான அல்ஹாபில் நசீர் அஹமட் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எம்.அன்வர், ஏ.எல்.எ.கபூர், எஸ்.ஐ.எம்.இம்தியாஸ், எம்.அஸ்மி, எம்.தையூப், ஏறாவூர் நகரசபை முன்னாள் தவிசாளர் எம்.ஐ.தஸ்லிம் மற்றும் ஊர் பிரமுகர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தகர்களும் கலந்து கொண்டனர்.











No comments: