News Just In

8/06/2021 02:17:00 PM

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் ஆலங்குளம் கிராமத்தில் சிரமதான பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு!!


(தாட்சாயினி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக்பிரிவிற்குட்பட்ட ஆலங்குளம் கிராமத்தில் அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலை முன் வளாகம் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாடசாலை முடிந்த பின் பெற்றோரின் வருகைக்காக தங்கி நிற்கும் இடம் என்பன 05.08.2021 நேற்று வியாழக்கிழமை சிரமதானம் செய்யப்பட்டன.

மேற்படி இந்த இடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தமையை அவதானித்ததன் பிரகாரம் சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து கோவிட் காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர் துஸ்பிரியோகங்கள் அதிகரித்து வருவதனால் அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான திருமதி மயூரி ஜனன் அவர்களினால் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் சார்ந்த சட்ட விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அத்தோடு அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது கிராமத்தின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டு அருவி பெண்கள் வலையமைப்பினால் கிராமத்தில் ஆண்கள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

அருவி பெண்கள் வலையமைப்பின் உதவி இணைப்பாளர் திருமதி தர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன், ஆலங்குளம் அ.த.க.பாடசாலை அதிபர், அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள், அருவி பெண்கள் வலையமைப்பின்இரண்டாம் கட்ட தலைமுறையினரான ACCA குழு, கிராமத்தின் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களும் கலந்து

















No comments: