News Just In

7/05/2021 03:03:00 PM

கல்முனை கிராம நிலைதாரிகள் நீதி கோரி கண்டன ஆர்ப்பாட்டம்- தனக்கு இது தொடர்பில் தெரியாது என்கிறார் கல்முனை பிரதேச செயலாளர்!!


(நூருல் ஹுதா உமர்)
கடந்த வெள்ளிக்கிழமை காணிப் பிணக்கு தொடர்பில் விசாரணைக்கு சென்ற கல்முனை பிரதேச செயலக உப செயலகத்தின் கிராம நிலதாரி ஒருவரை கல்முனையை சேர்ந்த ஒருவர் தாக்கியதாக குற்றம்சாட்டி சுலோகங்களை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று பகல் கல்முனை பிரதேச செயலக உப செயலகத்தின் முன்னால் கிராம நிலதாரிகளினால் முன்னெடுக்கப்பட்டது.

தாக்கப்பட்டதாக கூறப்படும் கல்முனை 01 சீ கிராம நிலதாரி சந்திரகுமார் தம்பிராசா எனப்படும் கிராம நிலத்தாரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, நீர் வடிச்சல் உள்ள காணிக்கு பக்கத்தில் உள்ள காணியை உரிமையாளர் தன்னுடைய காணியை நிரப்பும் போது நீர் வடிச்சளையும் நிரம்பியதாகவும் அப்போது வீதியால் சென்ற நான் அதை தட்டிக்கேட்டபோது தன்னை அந்த காணிக்குரியவர் தாக்கியதாகவும் தெரிவித்தார். மாத்திரமின்றி இப்படியானவர்களுக்கு அரசாங்கம் முறைய காணிப்பத்திரம் வழங்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தினார். மேலும் இதுதொட்ரபில் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிலதாரிகளினால் மகஜர் ஒன்றும் உதவி பிரதேச செயலாளர் அதிசயராஜிடம் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலியை ஊடகவியலாளார்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது ஆர்ப்பாட்டம் தொடர்பில் தனக்கு எவ்வித விடயங்களும் தெரியாது என்றும், தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நபரை கல்முனை பொலிஸார் அன்றைய தினமே கைது செய்துள்ளதாகவும், அதன் பின்னர் அந்த நபர் பிணையில் விடுதலையாகியுள்ளதாக தான் அறிவதாகவும் தெரிவித்தார். மேலும் இன்றைய போராட்டம் தொடர்பில் தனக்கு எவ்வித அறிவித்தல்களும் உத்தியோகபூர்வமாக கிடைக்கவில்லை என்றும் சில நேரங்களில் உதவி பிரதேச செயலாளருக்கு அறிவித்திருக்க கூடும் என்றும் தெரிவித்தார்.

தனக்கும் உதவி பிரதேச செயலாளருக்கும் பல வருடங்களாக புரிந்துணர்வு இருந்தும் தன்னுடைய அறிவுறுத்தல்கள் முதல் கல்முனை பிரதேச செயலாளராக தனக்கு முதலில் இருந்த யாருடைய அறிவித்தல்களையும் தற்போதைய உதவி பிரதேச செயலாளர் பின்பற்றுவதில்லை என்றும் இவ்விடயம் தொடர்பில் அம்பாறை அரசாங்க அதிபருக்கு பிரதிகளை அனுப்பியுள்ளதாகவும் இதன்போது ஊடகவியலாளார்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.






No comments: