News Just In

7/04/2021 10:58:00 AM

மீனோடை கட்டு - அக்கரைப்பற்று வயல் பிரதேச வீதி 205 மில்லியன் ரூபாய் செலவில் புணரமைப்பு- அதாஉல்லா எம்.பி நடவடிக்கை...!!


(நூருல் ஹுதா உமர்)
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு சிந்தனைக்கு அமைய ஒரு லட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் அட்டாளைசேனை மீனோடை கட்டு தொடக்கம் அக்கரைப்பற்று வரையிலான ஐந்து கிலோமீட்டர் தூரம் கொண்ட வயல் பிரதேச வீதியை காபட் வீதியாக 205 மில்லியன் ரூபாய் செலவில் புணரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகளுக்கான களவிஜயம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் யோசனைக்கு அமைய முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தை முன்மொழிந்த தேசிய காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இக்கள விஜயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக மாகாண பணிப்பளார் எம்.பி.எம். அலியார், ஓய்வு பெற்ற பிரதம பொறியியலாளர் என்.டீ .எம். சிராஜுதீன், நிறைவேற்று பொறியியலாளர் முஹம்மட் சஜீர், பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ், தொழிநுட்ப உத்தியோகத்தர்களான ஏ.எச்.முஹம்மத் நாளிர், முஹம்மட் றமீஸ், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.சி.எம். நிஸார், அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கள நிலவரங்களை ஆராய்ந்தனர்.






No comments: