News Just In

6/18/2021 01:21:00 PM

பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் டெப் கணனிகளை வழங்க திட்டம்- அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு...!!


இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு சலுகை திட்டத்தின் கீழ் டெப் கணினிகளை வழங்குதல் விரைவில் செயல்படுத்தப்படும் என்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும், டிஜிட்டல் தகவல் மற்றும் நிறுவன மேம்பாட்டு அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த டெப் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இ-தக்ஸலாவ திட்டங்களுடன் இணைந்து வழங்கப்படவுள்ளது.

ஈ தக்சலாவ தளம் இலவச டேடா பயன்பாட்டு முறைமையினுள் கொண்டுவரப்பட்டு அதனை இந்த டெப் ஊடாக அணுகுவதற்கான திட்டத்தின் படி, கல்வியை மேலும் இலகுவாக பெற்றுக் கொள்வதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிட்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணினியை இலவசமாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று நாமல் ராஜபக்ஷ கூறினார்.

வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட கணினிப் பாகங்களைப் பயன்படுத்தி உள்நாட்டில் பொருத்தப்பட்ட டெப் கணினிகளே வழங்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம் செலவு குறைவதோடு, இத்துறை வளரவும் பலருக்கு தொழில் வாய்ப்பு வழங்கவும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த டெப் கணினிகள் ஊடாக கல்வித் துறை சார் தெரிவு செய்யப்பட்ட தளங்களுக்கு மாத்திரமே பிரவேசிக்க கூடிய வகையில் கட்டுப்படுத்தப்படும் செயலிகள் மூலம் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இளைஞர் சமூக இயக்கம், இலங்கை பொதுஜன இளைஞர் முன்னணி மற்றும் பிற அமைப்புகளின் ஆதரவு மற்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மாற்றும் கல்வி ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜந்த ஆகியோரின் உதவியும் ஒத்தாசையும் இத்திட்டத்திற்கு கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.

No comments: