இதன் தலைவர் எஸ்.ஏ.கே.பழீலுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் ஜே.அருணன், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.ராஜ்மோகன், பிரிவு கிராம உத்தியோகத்தர் திருமதி ஜெயரூபன், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி றஸ்மினா, அல் பஜ்ர் அமைப்பின் செயலாளர் எம்.ஐ.கமால்தீன் உட்பட அதிகாரிகள் அமைப்பின் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்இதன் போது மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் காத்தான்குடி முதலாம் குறிச்சி பூநொச்சிமுனை, மற்றும் 19ம் வட்டாரம் ஆகிய பிரதேசங்களிலுள்ள தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உப கரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் இரண்டாம் கட்டமாக தமிழ் முஸ்லிம் 55 மாணவர்களுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டதுடன் கடந்த மாதம் 125 மாணவர்களுக்கு கற்றல் உப கரணங்கள் அம் மாணவர்களின் வீடுகளுக்கு சென்;று வழங்கப்பட்டன.மட்டக்களப்பு அல் பஜ்ர் நலன்புரி அமைப்பு வருடாந்தம்; இப் பிரதேசத்திலுள்ள தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு கற்றல் உப கரணங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: