News Just In

3/01/2021 03:48:00 PM

முல்லைத்தீவில் 4774 மாணவர்களுக்கு 37 பரீட்சை நிலையங்கள்..!!


2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சை இன்று(01) திங்கட்கிழமை காலை கொவிட்-19 சுகாதார நடை முறைகளை பேணி ஆரம்பமாகியுள்ளது.

இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளிலும் கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சை சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக ஆரம்பமாகி உள்ளது.

துணுக்காய் மற்றும் முல்லைத்தீவு கல்வி வலயங்களிற்குட்பட்ட பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் நேரத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சென்றுள்ளதை அவதானிக்கக் கூடியாதாக உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 919 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், ஆயிரத்து 855 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 4 ஆயிரத்து 774 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்காக மாவட்டத்தில் 37 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments: