News Just In

2/28/2021 02:22:00 PM

மட்டக்களப்பு - காத்தான்குடியின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு..!


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பிரதேசங்கள் நாளை காலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளன.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கபூர் வீதி, மொஹினார் ஒழுங்கை, சின்னதோன வீதி, டெலிகொம் மாவத்தை முதலாம் குறுக்கு வீதி ஆகிய பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

No comments: