News Just In

2/27/2021 12:19:00 PM

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் தாம் பணியாற்றும் பாடசாலைக்கு கதிரைகளை அன்பளிப்பு செய்த எம்.ரீ.எம்.பரீட் அதிபருக்கு பாராட்டுக்கள்!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய நூலகத்திற்கு வியாழக்கிழமை (25) கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

குறித்த பாடசாலையில் அதிபராக கடமையாற்றிவரும் எம்.ரீ.எம்.பரீட் அவர்களினால் பாடசாலை நூலகத்திற்கு 25 பிலாஸ்டிக் கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
நூலகத்தின் பயன்பாட்டுக்காக தமது நிதியிலிருந்து கதிரைகளை அன்பளிப்பு செய்த அதிபர் எம்.ரீ.எம்.பரீட் அவர்களுக்கு பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: