News Just In

2/28/2021 08:43:00 PM

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் மாணவர்களுக்கான கராத்தே ஒரு நாள் பயிற்சி செயலமர்வு!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஜப்பான் கராத்தே டூ சொடோகான் ஸ்டடி அஸோசியேஷன் அமைப்பினரால் ஓட்டமாவடி தேசிய பாடசாலை, வாழைச்சேனை இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளிலிருந்து கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி செயலமர்வும்,தர நிர்ணய பயிற்சியும் வாழைச்சேனை இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் 26,27ஆகிய திகதிகளில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பகுதி நேர கராத்தே பயிற்சி ஆசிரியர் ஏ.ஆர்.எம்.நவாஸ் மற்றும் இந்துக்கல்லூரி பகுதி நேர கராத்தே பயிற்சி ஆசிரியர் எஸ்.சதாநந்தகுமார் மற்றும் எஸ்.ஜோசப் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் ஜப்பான் கராத்தே டூ சொடோகான் ஸ்டடி அஸோசியேஷன் பிரதான பயிற்றுவிப்பாளர் ஹேரத் முதியான்ஷலாகே விஜயகுமாரவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் ஹலீம் இஸ்ஹாக் வாழைச்சேனை இந்துக்கல்லூரி அதிபர் ஏ.ஜெயஜீவன் கலந்து கொண்டு இப்பயிற்சி நெறியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.







No comments: