மட்டக்களப்பு மாநகர எல்லைப்பகுதியில் உள்ள சாரதா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்னடைந்த குடும்பங்களில் இருந்து கல்வியினை பல சவால்களுக்கு மத்தியில் தொடருகின்றனர். இவர்களது சூழ்நிலையினை அறிந்துகொண்ட தடம் அமைப்பினர். பிள்ளைகளின் கல்வி செயற்பாட்டிற்கு உதவும் வகையில் கற்றல் உபகரணங்களை பரிசளிப்பதற்கு முயற்சித்த நிலையில் சௌத்தென்ட் தமிழ் கல்விக்கூடம்- பிரித்தானியா அவர்களது நிதி அனுசரணையில் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய சௌத்தென்ட் தமிழ் கல்விக்கூடம் அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் மூலமாக பெற்ற நிதியினை மாணவர்களுக்கே பயன்பெற வேண்டும் எனும் உயரிய சிந்தனையில் குறித்த நிகழ்விற்கு நிதிப்பங்களிப்பு செய்துள்ளனர்.
இந் நிகழ்வில் தடம் அமைப்பின் ஆலோசகரும், மட்டக்களப்பு மாநகர முதல்வருமான தி.சரவணபவன், தடம் அமைப்பின் தவிசாளர் சி.விஜயகுமார், பொதுச் செயலாளர் சி.துஸ்யானந்தன், உப பொதுச்செயலாளர் ஞ.பிறேமானந்தன், நிதிச்செயலாளர் மு.சக்திரூபன், பாடசாலை அதிபர், ஆலய பரிபாலன சபையினர், சமூக ஆர்வலர்கள் தடம் அமைப்பின் உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றார்கள் கலந்துகொண்டனர்.
No comments: