கட்டுபெத்த பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட ஜீப் வண்டியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இருந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியின் 48 வயதுடைய சாரதியும், அவரது 69 வயதுடைய தயாருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேநேரம் காயங்களுக்குள்ளான முச்சக்கர வண்டி சாரதியின் மனைவி மற்றும் இரண்டு மகள்களும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸ் ஜீப்பின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சிறப்பு விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: