நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 460 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 890 ஆக பதிவாகியுள்ளதாக அரசத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 748 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 78 ஆயிரத்து 373 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 4 ஆயிரத்து 53 நோயாளர்கள் சிகிச்சைப் பெற்றுவருவதுடன், 379 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.
அதேநேரம் கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழப்புகள் பதிவாகாத நிலையில், நாட்டின் பதிவான மொத்த உயிரழப்புகளின் எண்ணிக்கை 464 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: