இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணித்தியால காலப்பகுதியில் குறித்த பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டுநாயக்கவிமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த 855 இலங்கையர்கள் 20 விமான சேவைகள் ஊடாக நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்படி, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து 133 பேரும், கட்டாரில் இருந்து 81 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள அனைவரும் இராணுவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக சுற்றுலா ஹோட்டல்களில் தங்கைவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த காலப்பகுதியில் 18 விமான சேவைகளின் ஊடாக 574 பேர் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: