சுபீட்சத்தை நோக்கிய கிராமிய பொருளாதாரத்தினை அபிவிருத்தியூடாக நஞ்சற்ற உணவு உற்பத்தியினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஐந்து வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தி செய்யப்படாத குளங்கள் மற்றும் வாய்கால்கள் தூர்ந்துபோன குளங்கள் அணைக்கட்டுகள் போன்றவற்றை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
எனவே இவ் வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கமநல சேவைகள் திணைக்களத்திற்குரிய 8 குளங்களும் 2 அணைக்கட்டுகளும் , மாகாண நீர்ப்பாசன திணைக்களத்திற்குரிய 7 குளங்களும் , மத்திய நீர்ப்பாசன திணைக்களத்திற்குரிய 7 குளங்களுமாக மொத்தம் 22 குளங்களும் 2 அணைக்கட்டுகளும் புனருத்தாரணம் செய்யப்படவுள்ளன. இவ் வேலைத்திட்டத்திற்கான நிதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. எனவே இப் புனரமைப்பு பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் வேலைத்திட்டமானது ஒப்பந்த காரர்களுக்கு வழங்கப்படமாட்டாது மாறாக விவசாய அமைப்பினர் பொது மக்கள் நலன்விரும்பிகள் மாணவர்கள் தொண்டர்கள் மூலமாகவே இந்த வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளது.
இக் கூட்டத்திற்கு அரசாங்க அதிபர் / மாவட்ட செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை கருணாகரன் ,மத்திய நீர்பாசன பணிப்பாளர் திரு.என். நாகரேத்தினம் , மாகாண நீர்பாசன பிரதிப்பணிப்பாளர் திரு.வே. ராஜகோபாலசிங்கம் , கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் திரு.கே. ஜெகநாத் , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.






No comments: