
யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேசவாரியாக நடைபெறும் நிலையில் இன்றைய தினம் (25.01.2021) யாழ் மாவட்டத்தின் வேலணைப் பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும்,மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் கட்டாக்காலிகள்,நில ஆக்கிரமிப்பு,வீடமைப்பு,விவசாயம்,கடற்தொழில் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும் இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், வேலணை பிரதேச செயலாளர்,பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் சுகாதார விதிமுறைகளுக்கமைவாக கலந்துகொண்டனர்.
No comments: