News Just In

1/01/2021 10:56:00 AM

மட்டக்களப்பு- காத்தான்குடி பகுதி இரண்டாவது நாளாகவும் முற்றாக முடங்கியது- பொது போக்குவரத்து வழமை நிலையில்....!!


மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பகுதிகளில் நேற்று முன்தினம் (2020.12.30) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் காத்தான்குடி பிரதேசத்தில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து குறித்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று(31) முதல் எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யப்பட்டுள்ளதோடு மட்டக்களப்பு நகரில் காணப்படும் பலசரக்கு கடைகள், மருந்தகங்கள் மற்றும் பழக்கடைகள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் மூன்று நாட்களுக்கு மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காத்தான்குடி பிரதேசத்தில் பொது போக்குவரத்துக்கள் வழமை போன்று இடம்பெறுகின்ற பொதும் அப்பிரதேசத்தில் வாகனங்களை நிறுத்துவதோ அல்லது ஆட்களை ஏற்றுவதோ முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு சன நடமாட்டமற்று காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மருந்தகங்கள், பழக்கடைகள் மற்றும் பலசரக்கு கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் சனா நடமாட்டம் குறைந்த நிலையில் காணப்படுகின்றது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யப்பட்டுள்ள பகுதியில் இராணுவத்தினரும் பொலீஸாரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளத்துடன், சுகாதார பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையை காணக்கூடியதாக உள்ளது.




















No comments: